ஆண்டு செயல் திட்டம் (2009-2010)
நோக்கங்கள்
1.மாணவர்கள் சேர்க்கையை தக்க வைத்தல்
2.குடிநீர் இணைப்பு பள்ளி வளாகத்திற்குள் பெறுதல்
3.தூய்மையான குடிநீர் பெற வகை செய்தல்
4.J.R.C,RSP போன்ற இயக்கங்களை வலிமைப் படுத்துதல்
5.வாசிப்புத்திறனை மேம்படுத்துதல்
6.ஆங்கிலம் பேச கற்றுத்தருதல்
7.மாணவர்களுக்கு கணிணிப்பயிற்சி(data entry) அளித்தல்
8.பொது அறிவை வளர்த்தல்
9.மாணவ,மாணவியர் எச்சூழலையும் ஏற்று வாழும் முறையை அறிய பழகுதல்
ஆண்டு செயல் திட்டம்
1.மாணவர் மேம்பாடு
1.உடல் ரீதியாக
2.மன ரீதியாக
3.கல்வி ரீதியாக
2.ஆசிரியர் மேம்பாடு
1.அனுபவ ரீதியாக
2.அறிவு ரீதியாக
3.பள்ளி கட்டமைப்பு
1.அமைவிட கட்டமைப்பு
2.உள்ளமைவு கட்டமைப்பு
4.பள்ளி சூழல் மேம்பாடு
1.சுகாதார சூழல்
2.கல்விச் சூழல்
5.பள்ளி தர மேம்பாடு
1.நிர்வாக மேம்பாடு
2.கல்வியியல் மேம்பாடு
6.சமுதாய மேம்பாடு
7.கலைதிட்ட மேம்பாடு
8.ஒருமைப்பாட்டுணர்வு மேம்பாடு
9.செயல் திட்டப்படி செய்ய வேண்டியன
1.மாணவர் மேம்பாடு
1.உடல் ரீதியாக
“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்பதற்கேற்ப மாணவர்களுக்கு சத்துணவு சரியாக கிடைக்கிறதா என ஆசிரியர் அறிய வேண்டும்.ஆசிரியர் ஒவ்வொரு நாளும் சத்துணவு கூடத்திற்கு சென்றுஉண்டுக்காட்டி போல செயல்பட்டு உணவின் நிறை குறைகளை பார்வையிட வேண்டும். வாரம் மூன்று முறை வழங்கப்படும் முட்டைகள் சரியான முறையில் மாணவர்களை சென்றடைகிறதா? என அறிய வேண்டும். பெற்றோர்களிடம் குழந்த்தைகளுக்கு சத்தான உணவு அவசியம் என்பதை விளக்கி சத்தான காய்கறிகள்,கீரை வகைகள்,கிடைக்க வகை செய்ய வேண்டும் தூய்மையான குடிநீரைப் பருக செய்ய வேண்டும்.அயோடின் உப்பைப் பயன்படுத்த செய்ய வேண்டும். “உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்ற திருமூலரின் வாக்கிற்கேற்ப உடலுக்கு வலிமையும்,உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் தரக்கூடிய உடற்ப்பயிற்சியை மாலை நேர இறுதி வகுப்பில் போதிக்க வேண்டும்.யோகா வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
2.மன ரீதியாக
பள்ளிசூழல் மாணவனுக்கு விருப்பமுள்ளதாக மாற்ற வேண்டும்.ஒவ்வொரு மாணவனிடமும் உள்ள அவனது திறன்,I.Q ஆகியவற்றைக் கொண்டு அவனின் தரம் உயர்த்த திட்டமிட வேண்டும்.அம்மாணவன் எச்சூழலையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு பயன்படுத்திக்கொள்ளும் அறிவை வளர்க்க வேண்டும் மாணவனின் மனமகிழ்ச்சி கற்பதிலும் இருக்க வேண்டும்.
3.கல்வி ரீதியாக
‘மாற்றங்கள் என்றும் ஏற்றம் தரும்’ தற்பொதைய நடைமுறையில் உள்ள ABL,ALM கற்றலில் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தியுள்ளது,அதை மேன்மேலும் சிறப்படைய ஆசிரியர்கள் உதவ வேண்டும்.
2.ஆசிரியர் மேம்பாடு
1.அனுபவ ரீதியாக
ஆசிரியர் தாம்அடைந்தஅனுபவங்கள்விசித்திரமானவையாகவும்,சிரிப்பூட்டுவதாகவும்,சிந்திக்க கூடியதாகவும் இருக்கும்.அவ்வனுபவங்களை கொண்டு தத்தம் பணிகளை செம்மையாக செய்து எங்கள் பள்ளியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முயல வேண்டும்.
2.அறிவு ரீதியாக
‘A teacher is always a student’,ஆசிரியர் தமது அடிப்படைத் தகுதியை
ஒவ்வோர் நாளும் புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும்.இளையார் எளியார் என இனம் பாராது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். புதிது புதிதாக கற்றால் நம் அறிவு மட்டுமல்லாமல் வருங்கால சந்ததியே அறிவுள்ளதாக மாற்றப்படும் என்பதை நினைவில் கொண்டு அதற்குரிய மேற்படிப்போ,நூலக புத்தகங்களையோ,பணியிடை பயிற்சியோ தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும். பயிற்சிகளில் பங்கேற்க வேண்டும்.
3.பள்ளி கட்டமைப்பு
1.அமைவிட கட்டமைப்பு
இருக்கின்ற கட்டிடங்களை சீரிய முறையில் பராமரிக்க அரசு அவ்வப்போது வழங்கும் பள்ளி பராமரிப்பு மானியம் சரியாக பயன்படுத்த வேண்டும்.எவ்வெவற்றிக்காக ஒதுக்கப்படுகிறதோ அதை அதற்காக மட்டுமே செயல்படுத்துதல் வேண்டும்.
SSA மூலம் வழங்க்கப்பட்ட புதிய கட்டிடத்தை சிறப்பானதாகவும்,வசதியானதாகவும் மாற்றி பயன்படுத்தி வருவோம்.
2.உள்ளமைவு கட்டமைவு:
எங்கள் பள்ளியில் SSA மூலம் பெறப்பட்ட கனிணியைக் கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான கணிணிக் கல்வியை சிறப்பாக தந்து முன் மாதிரிப் பள்ளியாக மாற்றல். பள்ளிக்கென்று ஒரு வலைப்பூ(WEB-BLOGSPOT) தொடங்குதல். அறிவியல் ஆய்வுகூடம் அமைத்தல் அதில் முறையாக அனைத்து சோதனைகளையும் மாணவர்க்கு கற்பித்து செய்து காட்ட வைத்தல்.
4.பள்ளி சூழல் மேம்பாடு:
1.சுகாதார மேம்பாடு
“சுத்தம் சுகம் தரும்” என்பதற்கேற்ப பள்ளி சூழலை மேம்படுத்த முதலில் சுத்தம் என்பது கட்டாயமாக இருக்க வேண்டும்.சுற்றுபுறம் சுத்தமாக இருந்தால்தான்
பார்க்க அழகாகவும் மன மகிழ்சியாகவும் இருக்கும் பள்ளியில் தோட்டம் அமைத்து பராமரிக்க வேண்டும்.
2.கல்வி சூழல்
பள்ளி சூழல் சுகாதாரமாகவும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவும் விடுமுறை நாட்களில் கூட மாணவர்களை பள்ளிக்கு வரும்படியான ஆர்வத்தை தூண்டும்படியான அமைப்புகளையும் செய்ய நாங்கள்
எந்நாளும் முயற்சி செய்வோம்.
5.பள்ளி தர மேம்பாடு
1.நிர்வாக மேம்பாடு:
பள்ளியின் அஸ்திவாரமே நிர்வாகத்தில்தான் என்பதை நாங்கள் அறிவோம். அதன் பொருட்டே தலைமை ஆசிரியர் எடுக்கின்ற தூய்மையான,தீர்க்கமான முடிவுகளைசிறப்பாக செயல்படுத்தினால் மாணவர் மட்டுமல்ல ஆசிரியரின் மதிப்பும் கூடும் என்பதை புரிந்து கூட்டு முயற்சியாக பள்ளியை நிர்வாகத்தில் மேம்பாட்டைச் செய்து ஆவணங்களை பராமரித்தும் புதுப்பித்தும் வைக்கப்பட வேண்டும்.
2.கல்வியியல் மேம்பாடு:
சேர்க்கையை தக்க வைத்தல்,இடை நிற்றல் இல்லாத பள்ளி என்ற பெயரைத் தக்க வைத்தல்,தரமான கல்வியை மாணவர்க்கு தொடர்ந்து அளித்தல்,இப்பள்ளியிலிருந்து மேற்பயில செல்லும் மாணவர்களை மற்ற பள்ளிகள் கரம் நீட்டி வரவேற்கும்
வகையில் எம் பள்ளி மாணவரின் தரத்தை அமைக்க முயற்சித்தல்,ALM,ABL ஆகியவற்றை மிக சிறப்பாக கொண்டு வருதல் ஆகியனமுக்கியமானநோக்கங்களாகும்
6.சமுதாய மேம்பாடு:
“ஊர் கூடினால் தேர் இழுக்கலாம்” என்பதற்கேற்ப மாதந்தோறும் VEC கூட்டங்கள் நடத்தப்பட்டு பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் நல்லதொரு நட்புறவை வளர்க்க வேண்டும்.
7.கலை திட்ட மேம்பாடு:
குழந்தைகளின் உலகம் கனிவான இசைவான ஆனால் ஆச்சரியமூட்டும் உலகம், அவர்களின் சிந்தனைகள் வரையறை இல்லாதவை.குழந்தைகளுக்கு புதிதிதாக அவர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக வாழ்த்து அட்டைகள் தயாரித்தல்,(2,3,4,5)பொம்மைகள் செய்தல்(5,6,7)சுடுமண் பொம்மைகள் செய்தல்(6,7,8)
மேலும் அவர்களின் நுண்ணறிவு திறனை வளர்த்தல்
8. ஒருமைப்பாட்டுணர்வை வளர்த்தல்:
பள்ளியில் மாணவர்களுக்கு ஒற்றுமை உணர்வை வளர்த்திட நன்னெறி கல்வியை போதிக்க வேண்டும்.தேசிய ஒருமைப்பாட்டுணர்வை மாணவர்களிடம் வளர்க்க காந்தி,காமராசர்,நேதாஜி,பசும்பொன்னார்,வ.உ.சி,சுப்ரமணிய சிவா ஆகியோர் பற்றியும்,ஜாலியன் வாலாபாக்,சுனாமி,குஜராத் பூகம்பம் போன்ற நிகழ்வுகளில் செய்யப்பட்ட உதவிகள் போன்றவற்றை பற்றி மாணவர்களுக்கு மாலை வழிப்பாட்டு கூட்டங்களில் கூறி அவர்களின் உணர்வை வளர்க்க வேண்டும்.
9.சூழல் அறிந்து வாழ அறிவூட்டல்:
மாணவ,மாணவியர் சமுதாயத்தின் எவ்விதமான சூழலையும் தனக்கேற்றதாக மாற்றிக்க கொண்டு வாழப் பழகுதல்,தன்விவரம் அறிய பழகுதல்,சமுதாய சீர்கேடுகளிலிருந்து தப்பிக்கப் பழகுதல்