twitter
    பள்ளியின் விவரம்:)
கல்வி வளர்ச்சி நாள்
கர்மவீரர் காமராசர் பிறந்த நாள்(15.07.09)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
வத்திமருத அள்ளி
விழா அறிக்கை



எங்கள் பள்ளியில் 15.07.09 அன்று காமராசர் பிறந்தநாள் விழா காலை 9.15 லிருந்து தொடங்கப்பட்டது. 9.15 மணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.B.கோவிந்தசாமி அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து கொடி வணக்கம் செய்தார்.திரு.முருகன்,ஓபுளி கவுண்டர் காங்கிரசின் தலைமகன் காமராசர் என்ற தலைப்பில் காமராசரின் செயல்களை எடுத்து கூறினார்.அது எளிய தமிழில் அனைவரையும் கவர்ந்தது.திரு.கந்தசாமி,மன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிகளும் மதிய உணவும் என்ற தலைப்பில் பேசியது அந்தக் கால பள்ளியைப் பற்றி மாணவர்கள் அறிந்துக் கொள்ள உதவியது.10.10 மணியளவில் கல்விப் பேரணி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஊர் முக்கிய வீதிகளின் வழியாக நடைப்பெற்றது.ஊர்வலத்தின் நேடுக கல்வி கண் தந்த காமரசரின் புகழ் பாடும் முழக்கங்களையும்,கல்வி பயில்வது குறித்த வாசகங்களையும் எழுப்பினர்.ஊர் மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
10.45 மணிக்கு கிராமக் கல்விக் குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைப் பெற்றது.பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.ம.சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.பள்ளி உதவி ஆசிரியர் திரு.சு.தமிழரசன் காமராசரின் வரலாற்றை சுருக்கமாக கூறி அவர் காலத்தில் கல்விக்கு செய்த மகத்தான சாதனைகளை புள்ளி விவரங்களுடன் கூறினார்.பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு.பூ.மணிவேல் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப் படுவதின் அவசியத்தை கூறினார்.பிறகு பள்ளிக்கு கிராமக் கல்விக் குழு மூலமாக ஆசிரியை நியமனம் செய்வதைப் பற்றி பேசப்பட்டது.மின் இணைப்பு மிகு மின்சாரத்தால் எரிந்த்ததை பற்றி பேசும் போது அதை சரி செய்ய பள்ளி மானியத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அலுவலகத்திலிருந்து மானிய தொகை பயன்படுத்தும் விதம் பற்றிய சுற்றறிக்கை அனைவருக்கும் படித்து காண்பிக்கப்பட்டது. இக்கூட்டம் நடைப் பெறும் போதே மாணவர்க்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன.விளையாட்டுப் போட்டிகளை உதவி ஆசிரியர் திரு.இ.என்.சந்திரசேகரன்,ஆசிரியைகள் ஈஸ்வரி,மங்கம்மாள் ஆகியோர் நடத்தினர்.மதியம் 12.40 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. 1.15க்கு பள்ளி துவங்கிய உடன் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடைப் பெற்றன.02.00 மணிக்கு மாணவர்களுக்கான பாட்டுப் போட்டிகளும்,நடன போட்டிகளும் நடைப் பெற்றன.மாணவர்கள் காமராசர் பற்றியும்,கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நாடகங்களை நடத்தினர். அந்நாடகங்கள் பொது மக்களை பெரிதும் கவர்ந்த்தது.இதைப் பார்த்து மகிழ்ந்த இளைஞர்கள் திரு.திருப்பதி,திரு.கிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி 250ரூ மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கினர்.

03.30 மணியளவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.இப் பரிசளிப்பின் போது கல்வியில் அனைத்து மானவர்களும் நன்றாக தேறி பள்ளிக்கும்,பிறந்த ஊருக்கும் பெருமை தேடித்தர வேண்டுமாய் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார். 04.00 மணிக்கு பரிசளிப்பு விழா முடிவடைந்த்தது. 04.15 க்கு இறை வணக்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் திரு.சந்திரன் நன்றி கூறினார்.

பள்ளி இணைய முகவரி:

Web:www.kalvipoonga.blogspot.com
e-mail:mstar2799@gmail.com
(புகைப் படங்களை மேற்கண்ட முகவரியில் பார்கலாம்)

0 comments:

Post a Comment